Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத காவியப் படைப்பு மைக்கேல் மதன காமராஜன்

18 அக், 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
30-Years-Of-Micheal-Madhana-Kamarajan

பொதுவாக கமல் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் படம் முழுக்க காமெடிகள் நிறைந்து இருந்த படம் மைக்கேல் மதன காமராஜன். கமல் மட்டுமல்ல படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுமே காமெடியில் கலக்கி இருப்பார்கள். அது தான் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.

"ராஜபார்வை", "பேசும்படம்", "அபூர்வ சகோதரர்கள்", என்று தொடர் சாதனைப் படங்களைத் தந்த கமல்ஹாசன் - இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் என்ற இந்த வெற்றிக் கூட்டணியில் வந்த நான்காவது திரைப்படம் "மைக்கேல் மதன காமராஜன்".

இப்படத்தில், கமலுக்கு, நான்கு வேடங்கள். திருடன், மைக்கேல்; தொழிலதிபர், மதனகோபால்; சமையல்காரர், காமேஷ்வரன்; தீயணைப்பு வீரர், ராஜு. அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருப்பார், கமல். ஒரு கதாபாத்திரத்தில் இருந்து, இன்னொரு கதாபாத்திரத்திற்கு நகரும் காட்சியில், கமலின் திரைக்கதை பிரமிக்க செய்யும். அப்போதிருந்த டெக்னாலஜியை வைத்து நான்கு கதாபாத்திரங்களையும் ஒரே பிரேமிற்குள் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது பிரமிப்பான ஒன்று.




இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, முதலில் கமல் அணுகியது பி.சி.ஸ்ரீராமைத் தான். அவருடைய தேதி கிடைக்காததால் கமல் தன்னோடு "பேசும் படம்" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிசி.கௌரி சங்கரை ஒளிப்பதிவாளராக்கினார். நிறைவான ஒளிப்பதிவை தந்து படத்தின் இமாலய வெற்றிக்கு துணை நின்றார்.

படத்தில் வரும் கமல்ஹாசனின் நான்கு கதாபாத்திரங்களின் தோற்றங்களையும் வடிவமைத்தது கமல்ஹாசனே. மதன் கதாபாத்திரத்தில் வரும் கமல்ஹாசனின் பாடிகார்டாக வரும் பிரவீன் குமார் சோப்டி பீம்பாய்" என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களின் நெஞ்சம் நிறைந்தார். 80களில் தொலைக்காட்சியில் வந்த "மகாபாரதம்" தொடரில் இவர் பீமனாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது. மேலும் 1966 மற்றும் 70ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து தங்கப்பதக்கம் வென்ற விiளாட்டு வீரரும் ஆவார்.

படத்தில் பலங்களில் ஒன்று, கிரேஸி மோகனின் வசனம். மாண்புமிகு குத்து விளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார், திருப்பு திருப்பு, மீனை வைத்து காமெடி என, கிடைத்த இடத்தில் எல்லாம், சிக்ஸர் அடித்தார்.




படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய வலு சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் இசை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். படத்தின் டைட்டில்பாடலான "கதகேளு கதகேளு" என்ற பாடலை இளையராஜாவே பாடியிருப்பார். இதன் தெலுங்குப் பதிப்பில் படத்தின் இயக்குநரான சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் பாடியிருப்பார். ரம் பம் பம் ஆரம்பம்" அன்றைய இளவட்டங்கள் மட்டுமல்ல இன்றைய இளவட்டங்களும் அசைபோடும் ரகம்.

"சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" எப்போது கேட்டாலும் மனதை வருடும் காதல் கீதம். இந்தப் பாடல் முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடுவதாக இருந்தது. அவரது தேதி கிடைக்காததால் கமல்ஹாசனையே பாடவைத்து வெற்றி பெறச் செய்தார் இசைஞானி இளையராஜா. "ஆடிப்பட்டம் தேடிச் சம்பா விதை போடு" என்ற ஒரு அருமையான பாடலும் உண்டு. ஆனால் படத்தின் நீளம் கருதியோ என்னவோ அந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை.

பெரும்பாலான தமிழ் படங்களில் நெற்றியில் விபூதியுடன் சாந்தமான அம்மாவாக வந்து போன பழம் பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி திருட்டுப் பாட்டியாக வந்து காமெடியில் கலக்கியிருப்பார். 79 ஆம் ஆண்டு வெளிவந்த "அலாவுதீனும் அற்புத விளக்கும்" திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த ஜெயபாரதி, இந்தப்படத்தில் நான்கு கமல்ஹாசனுக்கும் தாயாக நடித்திருப்பார். மேலும் நாகேஷ், மனோரமா, வெண்ணிறாடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சந்தானபாரதி, ஊர்வசி, குஷ்பூ, ரூபினி என்று ஒரு நடிகர் பட்டாளமே இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு நிறைவை தந்தது.




சந்தானபாரதி
இந்த படம் அனுபவம் பற்றி இதில் நடித்த இயக்குனர் சந்தானபாரதி அளித்த ஒரு பேட்டியில், ஒரு படம் விஷயமாக கமல் சந்திக்க இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு எதார்த்தமாக சென்றேன். போன இடத்தில் எனக்கும் ஒரு வேடம் கொடுத்து நடிக்க வைத்தார் கமல். இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின்பே என்னிடம் கதையை கூறினார்கள். இரட்டையர்கள் பற்றிய கதையை பார்த்திருக்கிறோம், ஆனால் நான்கு பேரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கதை என்றதும் சுவாரஸ்யமாக இருந்தது.

கமலும் இயக்குனரும் படத்தில் என்ன நடக்கிறது என தெளிவாக இருந்தனர். ஆனால் எங்களுக்கு தான் சமயங்களில் ஆச்சர்யப்படும் விதமாக காட்சிகள் அமைந்தன. குறிப்பாக கிளைமாக்ஸ் வரும் காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. அந்த காட்சியில் அந்த வீடு சாயும்போது நாங்களும் அதற்கு ஏற்றபடி சாய வேண்டும். உண்மையிலேயே அது பிரம்மிப்பாகவும், சவாலாகவும் இருந்தது. தமிழ் சினிமாவில் அந்த மாதிரியான காட்சி அது தான் முதல்முறை என்றார்.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தீபாவளித் திருநாள் வெளியீடாக வந்த இந்த "மைக்கேல் மதன காமராஜன்" இந்த 30 மட்டுமல்ல இன்னும் ஓர் முப்பது ஆண்டுகள் ஆனாலும் யாராலும் மறக்க இயலாத ஒரு காவியப் படைப்பு என்பதில் எந்த ஐயமுமில்லை.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் ஆனார் வரலட்சுமிஇயக்குனர் ஆனார் வரலட்சுமி முதன்முறையாக இணையும் குஞ்சாக்கோ போபன் நயன்தாரா முதன்முறையாக இணையும் குஞ்சாக்கோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

S. Narayanan - Chennai,இந்தியா
19 அக், 2020 - 17:05 Report Abuse
S. Narayanan உண்மை. நான் பார்த்து ரசித்த படம்.
Rate this:
paramasivan - le havre,இந்தியா
19 அக், 2020 - 11:32 Report Abuse
paramasivan எஸ் இட் ஐஸ் குட் சினிமா
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19 அக், 2020 - 08:25 Report Abuse
VENKATASUBRAMANIAN இவர் நல்ல நடிகர் கலைஞர். ஆனால் நல்ல அரசியல் வாதி இல்லை
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
18 அக், 2020 - 23:44 Report Abuse
S.Ganesan உண்மைதான். இன்று பார்த்தாலும் மனம் விட்டு சிரித்து மகிழும் படம். கமல் நடிப்பில் இது ஒரு வைரம். இது போல் இனி வருமா என்பது சந்தேகம்தான். காரணம் இப்போது வெறும் அடிதடி , அரிவாள், கொலை , பழிவாங்குதல் என்று ஒரே கதைக்களத்தையே சுற்றி சுற்றி வருகிறார்கள்
Rate this:
18 அக், 2020 - 23:39 Report Abuse
ராஜ் ஒரு சில அரசியல்வாதி சொந்தபேர சொல்ல வக்கில்லாம தமிழ் பேர்ல மறைஞ்சுகிட்டு தமிழ் தமிழன் விவசாயின்னு அடிச்சி விட்டு அரசியல் செய்வான். அந்த எளிய புள்ளட்ட சொல்லுங்க, திறமை தான் எல்லாமேன்னு. அது தான் உண்மைன்னு.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in