பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும், 'பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4' நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. தற்போது இந்த நிகழ்ச்சி ஆறாவது வாரத்தில் உள்ளது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனா அவர் நடிக்கும் 'வைல்டு டாக்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால், அவரால் சில வாரங்களுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாது.
எனவே, அவருக்குப் பதிலாக வேறு ஒரு சினிமா பிரபலத்தைத் தொகுத்து வழங்க வைக்க வேண்டும். அதற்காக நடிகை ரோஜாவைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனின் போது நாகார்ஜுனா சில வாரங்கள் தொகுத்து வழங்கவில்லை. அப்போது அவருக்குப் பதிலாக அந்த பணியை ரம்யா கிருஷ்ணன் சிறப்பாகச் செய்தார். ஆனால், இந்த முறை ரோஜாவை பிக் பாஸ் குழுவினர் அணுகியுள்ளார்களாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.