Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் சீசன் 4 - வெளியேறப் போகும் முதல் போட்டியாளர் யார் ?

17 அக், 2020 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Biggboss-:-Who-will-evict-this-week

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. 16 போட்டியாளர்கள் முதல் நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். முதல் வாரம் பெரிய அளவில் சர்ச்சை, பரபரப்பு இல்லாமல் நகர்ந்தது.

இரண்டாவது வாரமான இந்த வாரத்தில் மெதுவாக சண்டைகள் வர ஆரம்பித்தன. புதிய போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா, ஒவ்வொருவருக்கும் வெளியில் என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

முதல் வாரத்தில் 'எவிக்ஷன்' ஆகப் போகிறவர்களின் பட்டியலில், ஆஜித், கேப்ரியலா, ரம்யா பாண்டியன், ரேகா, சம்யுக்தா, சனம், ஷிவானி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஆஜித், கேப்ரியலா இளம் வயதினர் என்பதால் அவர்கள் இன்னும் சில வாரங்கள் தாக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது. சனம் அடிக்கடி சர்ச்சையை உருவாக்குவதால் அவரை சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள். ஷிவானி, கிளாமர் ஆடை அணிந்து அவருடைய இருப்பை இன்னும் சில வாரங்களுக்குத் தக்க வைத்துக் கொள்வார். ரம்யா பாண்டியனை அவ்வளவு சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள். மிஞ்சியிருப்பவர்கள் சம்யுக்தா, ரேகா.

கடந்த வருட சீசனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலில் வெளியேறியவர் பாத்திமா பாபு. நடுத்தர வயதுடைய போட்டியாளர்களைத்தான் முதலில் வெளியேற்ற ஆரம்பிப்பார்கள். அந்த விதத்தில் இந்த வாரம் சம்யுக்தா, ரேகா இருவரில் ஒருவர் வெளியேறலாம். அதிலும் ரேகா ஒரு நடிகை என்பதால் அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மற்றவர்களைத் திட்டித் திட்டியே நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தினார். எனவே, அவர் சில வாரங்கள் நீடிக்கலாம். அதனால், நமது கணிப்பின்படி இந்த வாரம் சம்யுக்தா வெளியேறவே அதிக வாய்ப்புண்டு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தற்கொலை செய்ய முடிவு செய்தேன் : சனுஷாதற்கொலை செய்ய முடிவு செய்தேன் : சனுஷா 'பிக்பாஸ்' தெலுங்கு, நாகார்ஜுனாவுக்குப் பதில் ரோஜா? 'பிக்பாஸ்' தெலுங்கு, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in