Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நில மோசடி வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரி சூரி மனு தாக்கல்

17 அக், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Land-foregery-issue-:-Soori-seeks-CBI-enquiry

காமெடி நடிகர் சூரி, வீரதீரசூரன் என்ற படத்தில் நடித்தார் அந்த படத்தை அன்புவேல்ராஜன் என்பவர் இயக்கினார். இந்த படத்தை அன்புவேல் ராஜனும், விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலாவும் இணைந்து தயாரித்தார்கள். இந்த படத்திற்கான சம்பளத்திற்கு பதிலாக நாங்கள் சிறுசேரியில் ஒரு இடம் வாங்கி தருகிறோம். அந்த இடத்துக்கான தொகையை சம்பளத்தை கழித்துக் கொண்டு மீதியை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அந்த இடத்தை 3 கோடியே 10 லட்சத்துக்கு சூரியிடம் விற்றுள்ளனர். அதில் தனது சம்பளம் போக மீதமுள்ள தொகையை சூரி கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்த இடத்துக்கு செல்ல பாதை இல்லை என்பதும், சரியாக டாக்குமெண்டுகள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் சூரி பணத்தை திருப்பி கேட்க 40 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ரமேஷ் குடவாலா மீதமுள்ள 2.70 கோடியை தராமல் ஏமாற்றி உள்ளார்.

இது தொடர்பாக வளவரவாக்கம் போலீசில் புகார் செய்த சூரி இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், சூரி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: என்னை மோசடி செய்த வழக்கில் முன்னாள் டிஜிபி சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த விசாரணையை, தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது, சிபிஐக்கு மாற்ற வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'புத்தம் புதுக் காலை' - காப்பி அடித்தாரா கார்த்திக் சுப்பராஜ் ?'புத்தம் புதுக் காலை' - காப்பி ... தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணி தொடங்கியது: 1303 பேர்தான் வாக்களிக்க முடியும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Indhuindian - Chennai,இந்தியா
17 அக், 2020 - 14:28 Report Abuse
Indhuindian எஜமான் எங்க வூட்டுக்கு பக்கத்துலே இருக்கறவரு ஆயிரம் ரூவா கடனாக வாங்கி ரெண்டு வருஷமா இஷுத்தடிச்சிகிட்டு இருக்காரு தயவு பண்ணி CBI விஜாரிக்க ஏற்பாடு பண்ணுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in