Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஎப்எக்ஸ் துறையில் நுழைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மகன்

16 அக், 2020 - 19:55 IST
எழுத்தின் அளவு:
Siddharth-Priyadarshan-enters-in-VFX-Dept.,

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனரான இயக்குனர் பிரியதர்ஷன், தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே அறிமுகமானவர். இவரது மனைவி லிசி முன்னாள் கதாநாயகி என்பதும் பலருக்குத் தெரியும். இவர்களது மகள் கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என மும்மொழிகளிலும் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் மீடியாக்களில் கல்யாணியின் பெயர் தான் அடிபடுகிறதே தவிர, பிரியதர்ஷனின் மகன் சித்தார்த்தின் பெயர் எப்போதும் பரபரப்பாக அடிபட்டது இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகள் பட்டியலில் சித்தார்த்துக்கும் ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. மோகன்லால் நடிப்பில் தனது தந்தை இயக்கத்தில் உருவாகியுள்ள, இன்னும் வெளியாகாத, 'மரைக்கார்' படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கான சிறப்பு விருதைத்தான் சித்தார்த் பெற்றுள்ளார்.

அமெரிக்கா சென்ற விஎப்எக்ஸ் படிப்பை முடித்துவிட்டு வந்த சித்தார்த், நேரடியாக தனது தந்தை இயக்கி வந்த 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் விஎப்எஸ் சூப்பர்வைசராக பணியாற்றினார். முதல்படமே வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் மிகவும் நேர்த்தியாக தனது வேலையை செய்துள்ளார் சித்தார்த். அதற்கு கௌரவம் செய்யும் விதமாகத்தான், தற்போது அவருக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பொதுவாகவே இயக்குனரின் மகன் என்றால் நடிகராகவும் இயக்குனராகவும் மாறுவார்கள் என்கிற வழக்கமான பார்முலாவை, சித்தார்த் பிரியதர்ஷன் உடைத்துள்ளார் என்று சொல்லலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமூக இடைவெளியை பின்பற்றும் த்ரிஷ்யம் 2 படக்குழுசமூக இடைவெளியை பின்பற்றும் ... சீனியர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் சீனியர்கள் கூட்டணியில் உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in