மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர் | திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி | அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரையுலகில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். 'அவன் இவன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
தற்போது மீண்டும் நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர். அரிமா நம்பி, இருமுகன், நோட்டோ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
பல மொழிகளில் தயாராகும் இப்படம், ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் இன்று(அக்., 16) தொடங்கியுள்ளது. ஆர்யா - விஷால் தவிர படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.