Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தால் தற்கொலை தான் செய்யணும் : நுங்கம்பாக்கம் இயக்குனர் வேதனை

16 அக், 2020 - 15:15 IST
எழுத்தின் அளவு:
If-the-film-is-released-on-Tamil-rockers,-i-will-commit-suicide-:-says-Nungambakkam-director

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து நுங்கம்பாக்கம் என்ற படத்தை இயக்கி உள்ளார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். விஜய்காந்த் நடித்த உளவுத்துறை படம் மூலம் புகழ்பெற்றவர் இவர். சுமார் 2 வருட போராட்டத்திற்கு பிறகு இந்தப் படம் வருகிற 24ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறியதாவது: இந்த படத்திற்காக இரண்டு ஆண்டு வரை சட்ட போராட்டமும், சமூக, தனிமனித போராட்டமும் நடத்தியிருக்கிறேன். ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் போலீஸ் முன்பும், வக்கீல்கள் முன்பும், முகம் தெரியாத ஜாதி தலைவர்கள் முன்பும் இமேஜ் இழந்து நின்றேன்.

நான் 7 படம் இயக்கியவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள். என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதை தூக்கு, இதை தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் அனுமதி லெட்டர் கிடைத்தது.

அதன்பின் சென்சார் போனேன். அங்கு கேரக்டர் பெயர், டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. 6 மாத போராட்டம். எல்லாவற்றையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. தற்போது ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது.

இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள் என்று தமிழ் ராக்கர்சை இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். அப்படி எடுத்தால் நான் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். பல கோடிகளை இழந்து விட்டு நிற்கிறேன். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகவும் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரம்யா பாண்டியனின் வெப்சீரிஸ் அக்., 30ல் ரிலீஸ்ரம்யா பாண்டியனின் வெப்சீரிஸ் அக்., ... மீண்டும் இணையும் அவன் இவன்! மீண்டும் இணையும் அவன் இவன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19 அக், 2020 - 13:33 Report Abuse
Yaro Oruvan அந்த குடும்பத்தின் துயரத்தை வைத்து நீ படம் எடுத்து பணம் சம்பாதிப்பது எந்த வகையில் சேத்தி ?? மக்களே இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் பாத்து பாடம் புகட்டுங்கள்
Rate this:
17 அக், 2020 - 12:04 Report Abuse
chandran, pudhucherry சுவாதி சம்பவம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதை நீ சொல்லிதான் தெரிஞ்சிக்கனுமா. திரௌபதி மாதிரி வெளி உலகத்துக்கு தெரியாத விஷயத்த எடுங்கப்பா.
Rate this:
SOWMIYA -  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2020 - 09:20 Report Abuse
SOWMIYA Intha Mari padam saagathanda venum..... avan avan ponna kodurama kolai panitaanugalenu kavalapatta atha padam eduthu nee kasu paakuriya....naathari payalugala.....
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16 அக், 2020 - 18:48 Report Abuse
Parthasarathy Badrinarayanan நீங்கள் ஏன் தற்கொலை செய்கிறீர்கள். கண்டவனுக்குப் பிறந்த தமிழ்ராக்கர்ஸை தேடிப்பிடித்து அடியுங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in