Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்யா பாண்டியனின் வெப்சீரிஸ் அக்., 30ல் ரிலீஸ்

16 அக், 2020 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Ramya-Pandiyan-webseries-releasing-on-Oct-30

நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர் மகளான ரம்யா பாண்டியன், டம்மி டாப்பாசு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஜோக்கர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்தார். மண் சார்ந்த முகவெட்டு இருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் அமையவில்லை. என்றாலும் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தன்னை எப்போதும் லைம் லைட்டில் வைத்துக் கொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள 'முகிலன்' என்ற வெப் தொடர் வருகிற 30ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதில் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தொடர் இது. தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி தான் கதை. ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னை பொழுதுபோக்கு பொருளாக பார்க்காதீர்கள்: ரசிகர்களுக்கு ரிச்சா அறிவுரைஎன்னை பொழுதுபோக்கு பொருளாக ... தமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தால் தற்கொலை தான் செய்யணும் : நுங்கம்பாக்கம் இயக்குனர் வேதனை தமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in