Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை பொழுதுபோக்கு பொருளாக பார்க்காதீர்கள்: ரசிகர்களுக்கு ரிச்சா அறிவுரை

16 அக், 2020 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Richa-advices-to-fans

தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. அதன் பிறகு சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த ரிச்சா, பட வாய்ப்புகள் இல்லததால் மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பி விட்டார். தற்போது தனது காதலர் ஜோவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். அமெரிக்க கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

சினிமாவை விட்டு விலகினாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை தெரிவிப்பார். சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த காட்டுத் தீயில் சிக்கி தவிக்கும் விபரத்தை வெளியிட்டிருந்தார். என்றாலும் அவரை இன்ஸ்ட்ராகிராமில் பின் தொடரும் ரசிகர்கள். உங்கள் கவர்ச்சி படத்தை பதிவிடுங்கள், அழகாக இருக்கிறீர்கள் மீண்டும் நடியுங்கள் என்று கூறி வந்தார்கள்.

இதற்கு பதில் அளித்து ரிச்சா எழுதியிருப்பதாவது: நான் 5 ஆண்டுகள் தான் சினிமாவில் இருந்தேன். அதை விட்டு விலகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமா என் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். நான் இன்னும் அந்த மாய உலகில், கனவுலகில் இருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறீர்கள். என் படங்களை பதிவிடச் சொல்லி என்னை உங்கள் பொழுதுபோக்கு பொருளாக மாற்றப் பார்க்கிறீர்கள்.

எனக்கென்று தனியான கருத்து இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. என்னை 35 வயது பெண்ணாக நினைத்து என்னுடன் உரையாடுகிறவர்களை நான் வரவேற்கிறேன். என்னை அப்படி மதிப்பவர்கள் மட்டுமே என்னை பின் தொடருங்கள். என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தலைவி படத்திற்கு தடை கேட்டு மீண்டும் வழக்குதலைவி படத்திற்கு தடை கேட்டு ... ரம்யா பாண்டியனின் வெப்சீரிஸ் அக்., 30ல் ரிலீஸ் ரம்யா பாண்டியனின் வெப்சீரிஸ் அக்., ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Indhuindian - Chennai,இந்தியா
19 அக், 2020 - 06:22 Report Abuse
Indhuindian ஜொள்ளுங்களுக்கு சரியான சவுக்கடி . .....ப்டின்னு கூட சொல்லலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in