Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதைப் பொருள் விவகாரம் - விவேக் ஓபராய் வீட்டில் போலீஸ் சோதனை

15 அக், 2020 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Drugs-case-:-Vivek-Oberoi-house-searched-by-police

மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர்.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா தலைமறைவானார். இந்நிலையில் அவர், மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் தங்கியுள்ளாரா என, பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர்.

இது குறித்து பெங்களூரு இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், ஆதித்யா ஆல்வா தலைமறைவாக உள்ளார். உறவினரான விவேக் ஒபராய் வீட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து, கோர்ட்டில் சோதனை நடத்துவதற்கு அனுமதி வாங்கி, மும்பை சென்று விவேக் ஓபராய் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் மீண்டு வருவேன் - சஞ்சய் தத் நம்பிக்கைவிரைவில் மீண்டு வருவேன் - சஞ்சய் தத் ... பாலிவுட் பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா பாலிவுட் பாடகர் குமார் சானுவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in