Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுனுக்கு டப்பிங் பேசி விருது பெற்ற வினீத்

15 அக், 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Vineeth-spoke-dubbing-for-Arjun-and-got-award

தமிழில் ஜாதிமல்லி, காதல் தேசம், சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் வினீத். மலையாளத்தில் பிரபல கதாநாயகனாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, மற்ற மொழிகளிலிருந்து மலையாளத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். அதன் உடன் நடனத்தையும் தொடர்ந்து வருகிறார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள, இன்னும் வெளியாகத 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் அர்ஜுனுக்காக டப்பிங் குரல் கொடுத்துள்ளார் வினீத். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருது பட்டியலில் மரைக்கார் மற்றும் லூசிபர் ஆகிய படங்களில் டப்பிங் பேசியதற்காக சிறந்த டப்பிங் கலைஞர் என்கிற விருது வினீத்துக்கு கிடைத்துள்ளது.

லூசிபர் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய்க்கு டப்பிங் குரல் கொடுத்ததும் வினீத் தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால், வினீத் ஆரம்பகாலத்தில் நடித்த அவரது படங்களிலேயே அவர் சொந்தமாக டப்பிங் பேசியது இல்லை, அவருக்கு வேறொருவர் தான் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிகரெட் பிடிக்கும் வீடியோ வெளியிட்டு மெசேஜ் சொல்லும் கொலைகாரன் நடிகைசிகரெட் பிடிக்கும் வீடியோ ... ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார் ஆஸ்கர் விருது பெற்ற ஆடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in