Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த அசுரன் டீஜே

15 அக், 2020 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Teejay-says-no-to-Muralitharan-biopic

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 800 எனும் பெயரில் தயாராகி வருகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறியிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க கூடாது என இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில், தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜே அருணாசலம், முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க தன்னை படக்குழு அணுகியதாகவும், ஆனால் அதை தான் நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "நான் இந்தியாவில் இருந்த போது 800 படத்தின் தயாரிப்பு குழு என்னை அணுகி படத்தின் கதையை விவரித்தனர். இளம் வயது முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டனர்.

800 படத்தில் இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அது எனக்கு சரியானதாக படவில்லை. எனது தாய் ஒரு இலங்கை தமிழர். இலங்கை போரில் ஏராளமான கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனவே இந்த படம் தொடர்பான அரசியலில் சிக்க நான் விரும்பவில்லை. ஆகையால் படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டேன்", என டீஜே தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
22 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரசாந்த் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?22 வருடங்களுக்கு பின் மீண்டும் ... சிகரெட் பிடிக்கும் வீடியோ வெளியிட்டு மெசேஜ் சொல்லும் கொலைகாரன் நடிகை சிகரெட் பிடிக்கும் வீடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rauf thaseem - mawanella,இலங்கை
16 அக், 2020 - 06:51 Report Abuse
rauf  thaseem இலங்கை மலைநாட்டு தமிழர்கள் கொத்தடிமைகளாக தோட்ட வேலைக்காக ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டவர்கள் , அனாலும் நிறைய இந்தியர்கள் ,வியாபாரத்துக்காகவும் இலங்கை வந்து குடியேறினர் , அநேகர் சட்டவிரோதமாக வந்தவர்கள் . மலை நாட்டிலுள்ள பணக்காரர்கள் , நிலக்காரர்கள் , இதில் அடக்கம் , முரளி , மற்றும் மலையக தமிழ் அரசியல் வாதிகள் உட்பட , தொழிலாளி இன்றும் வறுமை கோட்டுக்கு கீழ் - மற்றவர்கள் சிங்களத்தோடு ,கலந்து விட்டனர் , , இவர்களை வைத்து பணம் பண்ணுபவர்கள் , தொழிலாளிக்கு தினக்கூலி கூட சரியாக இல்லை , இவர்களை கவனிப்பாருமில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in