Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

22 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரசாந்த் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?

15 அக், 2020 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Prashanth---Aishwaryarai-to-pair-again

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். 2018-ம் ஆண்டு ரிலீசான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். தன் மகன் பிரசாந்தை நாயகனாக்கி, மோகன் ராஜாவை வைத்து இப்படத்தை உருவாக்க தியாகராஜன் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது திடீரென அந்தாதூன் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய பெடரிக் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. அந்தாதூனில் தபு நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். தற்போது அந்தாதூன் படத்தில் அவர் நடிப்பது உறுதியானால் 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் - ஐஸ்வர்யா ராய் ஜோடியைத் திரையில் காணலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா!வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த ... முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த அசுரன் டீஜே முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in