குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் சண்டைக்கு இழுத்து கண்டெண்ட் கொடுத்து வருகிறார் சுரேஷ். இதனால் தவறாமல் பிக் பாஸ் புரோமோக்களிலும் இடம் பெற்று விடுகிறார்.
தனி ஆளாக கிடைக்கும் ஒவ்வொரு விசயத்தை அம்பாக மாற்றி மற்ற போட்டியாளர்கள் பக்கம் திருப்பி விட்டு விடும் சுரேஷின் சாமர்த்தியம் ஒரு புறம் ஆச்சர்யத்தை தந்தாலும், மறுபுறம் அவரால் பிக் பாஸ் வீடு எப்போதும் சண்டைக்களமாக இருப்பது எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. தனக்கு எதிராக திரும்பும் ஒவ்வொரு போட்டியாளரையும் அலட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறார் சுரேஷ். இதுவே அவரது தந்திரமாக இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்துள்ளார் விஜே அர்ச்சனா. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போதே, 'தீமை தான் வெல்லும்..' என்ற பாடலை ஒலிக்கிறது. அதோடு வந்த கையோடு அவர் சுரேஷை தான் கலாய்க்க ஆரம்பித்து விட்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் குஷியாகி விட்டனர்.
ஒரு கட்டத்தில் அர்ச்சனாவின் பேச்சால் எரிச்சலைந்து சுரேஷ், சமையலறையில் இருந்து பாத்ரூம் செல்வது போல் புரோமோவில் காட்சிகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும் போது சுரேஷுக்கு சரியான பதிலடி தரும் போட்டியாளராக அர்ச்சனா இருப்பார் என்றே தெரிகிறது. இனி, சத்தமில்லாமல் சுரேஷ் ஸ்டைலில் அர்ச்சனாவும் சிரித்துக் கொண்டே அவருக்கு பதிலடி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.