ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் இந்தி நடிகை கங்கனா ரனாவத். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தலைவி படத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதளப்பக்கம் மூலம் நேரலையில் பேசிய அவர், "தலைவி படத்தில் எம்ஜிஆர் மனைவி ஜானகி வேடத்தில் நடிக்கிறேன். நான் ஜானகி அம்மாவை பார்த்தது இல்லை. ஆனால் ஜெயலலிதா அம்மாவை பார்த்திருக்கிறேன். ரோஜா படத்திற்காக அவர் கையால் விருது வாங்கினேன்.
ஜானகி அம்மா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை இயக்குனர் விஜய் என்னிடம் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து அவரது உடல்மொழியை பழகி வருகிறேன். அதன் அடிப்படையில் படத்தில் நடிக்கிறேன்", என மதுபாலா கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தடைப்பட்ட தலைவி படப்பிடிப்பு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியது. முதலில் கங்கனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. விரைவில் மதுபாலா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது.