Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுபவமே பாடம் : ரஜினி டுவீட்

15 அக், 2020 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-tweet-becomes-Trend

சென்னை : ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரம் தொடர்பாக ‛#அனுபவமே_பாடம் என்னும் ஹேஸ்டேக் உடன் டுவிட்டரில் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி உபயோகித்த இந்த ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.

நடிகர் ரஜினிக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்துக்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அக்.,15ம் தேதிக்குள் செலுத்தாவிடில் இரண்டு சதவீத அபராதத்துடன் வரி செலுத்த நேரிடும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று (அக்.,14) விசாரணைக்கு வந்தபோது, ரஜினி தரப்பை நீதிபதி கடுமையாகக் கண்டித்தார். நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிக்கப் போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து, அந்த ‛மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது. சமூக வலைதளங்களில் பலரும் வரி செலுத்தாத ரஜினி என விமர்சனத்தை முன்வைத்தனர்.

இந்நிலையில், வரி செலுத்த இறுதிநாளான இன்று, 6.50 லட்சத்தை ரஜினி தரப்பில் இருந்து செலுத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ரஜினி, ‛ராகவேந்திரா மண்டப சொத்து வரி.. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம், என பதிவிட்டிருந்தார். இதில் #அனுபவமே_பாடம் என்னும் ஹேஸ்டேக்குகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் எப்போதும் டிரெண்டாகும் நிலையில், அவரது டுவீட்டில் பதிவிட்டுள்ள வார்த்தையும் தற்போது டிரெண்டாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு, குறைந்த அளவில் மக்கள் வருகைஇன்று முதல் தியேட்டர்கள் திறப்பு, ... மோசடி எதிரொலி - டிவி ரேட்டிங் 12 வாரங்கள் நிறுத்தம் மோசடி எதிரொலி - டிவி ரேட்டிங் 12 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் THERE ARE THREE METHODS TO GAINING WISDOM. THE FIRST IS REFLEXION, WHICH IS THE HIGHEST. THE SECOND IS LIMITATION, WHICH IS THE EASIEST. THIRD IS EXPERIENCE, WHICH IS THE BITTEREST. - CONFUCIUS GOOD JUDGMENT COMES FROM EXPERIENCE AND EXPERIENCE COMES FROM BAD JUDGMENT.
Rate this:
ocean - Kadappa,இந்தியா
17 அக், 2020 - 16:55 Report Abuse
ocean ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை கனம் கோர்ட்டார் அவர்களே.
Rate this:
vira - tamil naadu,இந்தியா
16 அக், 2020 - 17:23 Report Abuse
vira என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ஆனால் ஒரு பைசா தரா மாட்டேன்
Rate this:
rauf thaseem - mawanella,இலங்கை
16 அக், 2020 - 06:35 Report Abuse
rauf thaseem அரசியலிலும் அவசரப்படாமல் இருப்பது நன்று
Rate this:
Google -  ( Posted via: Dinamalar Android App )
15 அக், 2020 - 21:32 Report Abuse
Google Atha first la ye koduthu irukalame.Ematha nenasathu aappu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in