சினிமாவாகும் ஜெய்சங்கர் வாழ்க்கை | காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள் | மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? |
தென்னிந்தியத் திரையுலகத்தில் பெரும் நடிகர் என ரஜினிகாந்த், இயக்குனர் என ஷங்கர் ஆகியோர்தான் பெயரை தக்க வைத்திருந்தனர். 'பாகுபலி' படங்கள் வரும் வரைக்கும் மட்டுமே அவை இருந்தன. அதன்பின் அவற்றை தெலுங்கு நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி கொத்திக் கொண்டு போய்விட்டனர்.
ஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த '2.0' படத்தின் சாட்டிலைட் உரிமை 110 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அது மிகப் பெரும் தொகை. அந்தப் படத்திற்குப் பிறகு வேறு படங்கள் அந்த விலையைத் தாண்டவில்லை.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஹாட்ஸ்டார் டிஜிட்டல் உரிமையையும், ஸ்டார் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக உள்ளது.