போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
திரைப்படங்களை தியேட்டர்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்தான் திரையிட்டு வருகிறார்கள். அதற்கான கட்டணத்தை படத்தயாரிப்பாளர்கள் தான் செலுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் முதல் வாரம், 2வது, 3வது வாரம் என கட்டணம் மாறுபடும். இந்த கட்டண விவகாரம் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் ஏற்கெனவே பிரச்சினை உள்ளது.
அந்த விபிஎப் கட்டணத்தை தாங்கள் செலுத்த மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். விபிஎப் கட்டணங்களை வாங்கும் டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது கட்டணத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.இதனிடையே, இந்த வருடம் டிசம்பர் 31 வரை விபிஎப் கட்டணத்தைக் குறைப்பதாக முக்கிய நிறுவனமான கியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் சில தியேட்டர்காரர்கள் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றைக் குறைக்கலாம் என முடிவெடுத்துள்ளார்கள். விவிஎப் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டால் டிக்கெட்ட கட்டணத்தை மேலும் குறைக்கலாம்.
இந்தியாவில் பல மாநிலங்களில் நாளை(அக்.,15) தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. அடுத்த வாரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.