சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கடந்த 7 மாதங்களாக, அதாவது கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து, பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் ஒரு ரியல் ஹீரோவாகவே மாறி பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பிய பிறகும்கூட, உதவி செய்வதை அவர் நிறுத்தவில்லை.
தனது தாயார் சரோஜ் சூட் அவர்களின் பதிமூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு புரபெசர் சரோஜ் ஷூட் ஸ்காலர்ஷிப் என்கிற ஒரு டிரஸ்ட்டை உருவாக்கி, அதன்மூலம் ஐஏஎஸ் பயிற்சி பெற விரும்பும் வசதியற்ற இளைஞர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கபோவதாக அறிவித்துள்ளார் சோனு சூட். தனது தாயார் சரோஜ் சூட், கல்வி பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதால், அவரது நினைவு நாளில் இந்த நல்ல விஷயத்தை முன்னெடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் சோனு சூட்.