Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி

14 அக், 2020 - 16:53 IST
எழுத்தின் அளவு:
After-cout-warning-:-Rajini-withdraws-the-case

சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்துமாறு மாநகராட்சி அளித்த நோட்டீஸ்-க்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி கண்டனம் தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதனால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? என கேள்வியெழுப்பினார். மேலும், அதிக அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார். நீதிபதி கண்டனத்தை அடுத்து, அபராதம் விதிக்க வேண்டாம், வழக்கை திரும்பப் பெறுகிறோம் என ரஜினி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரதி பூவன்கோழி: ஒரு முன்னோட்டம்பிரதி பூவன்கோழி: ஒரு முன்னோட்டம் ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் சோனு சூட் ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 அக், 2020 - 02:44 Report Abuse
Krishnamoorthy please release full news to readers.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in