Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷேம் ஆன் விஜய்சேதுபதி : 800 படத்திற்கு எதிர்ப்பு : டுவிட்டரில் டிரெண்டிங்

14 அக், 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Oppose-to-Vijaysethupathi-and-his-800-movie

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர்.

இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. அதனால், விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் இப்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது.

முரளிதரன் இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும், விஜய் சேதுபதி தன்னை ஒரு தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்பவர். அப்படியிருக்கும் போது அவர் எப்படி இதில் நடிக்க சம்மதித்தார் என இன்று டுவிட்டரில் ஷேம் ஆன் விஜய்சேதுபதி என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராகினி திவேதிக்கு ஜாமீன் கிடைக்குமா ?ராகினி திவேதிக்கு ஜாமீன் கிடைக்குமா ... 100 மில்லியன் கிளப்பில் இணைந்த 'பாகுபலி' பாடல் 100 மில்லியன் கிளப்பில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in