இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
கன்னட நடிகையான ராகினி திவேதி போதைப் பொருள் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தவறி விழுந்ததில் அவருக்கு முதுகியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரை பெங்களூரு மத்திய சிறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவர் இன்னும் குணமடையவில்லை.
அதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கும்படி அவரது வழக்கு நடக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது கைப்பற்றிய பென் டிரைவ் மற்றும் டேப்லெட் ஆகியவற்றை தன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி மற்றொரு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
ராகினி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ஏதாவது ஆட்சேபம் இருக்கிறதா என மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சிறப்பு நீதிமன்றம் கேட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் தனியார் மருத்துவமனையில் ராகினி சேர்க்கப்படலாம்.