Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள் : சூரியை மறைமுகமாக சாடிய ஜுவாலா கட்டா

13 அக், 2020 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Jwala-Gutta-slams-soori-indirectly

வீரதீரசூரன் என்ற படத்தில் நடித்தற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் படத்தில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது சூரி போலீசில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர்.

இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிட்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா, தனது இன்ஸ்ட்ராகிராமில் சூரியை மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தச் சமூகம் நியாயமற்றதாகவும், எளிதில் ஒருவரைப் பற்றி தீர்மானிக்கக் கூடிய நிலைக்கும் மாறிவிட்டது. நல்ல குடும்ப பின்புலத்தோடு, பார்க்கப் பணக்காரர்போல இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும்போது இன்னொருவர் அந்த மாதிரியான தோற்றத்தில் இல்லையென்றால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டவர்களுக்குப் பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறது. ஏனென்றால் அவர் பார்ப்பதற்குப் போராடி வந்தவரைப் போலத் தெரிகிறார். தனது போராட்டம் பற்றியே எப்போதும் பேசுகிறார் என்பதால்.

தங்களது போராட்டம் பற்றிப் பேசாதவர்கள், தனது போராட்டம் பற்றி பேசும் நபரைவிடக் குறைவானவர்களா? அவர்களுக்கென அடிப்படை உரிமைகள் இல்லையா? ஒருவர் பார்ப்பதற்கு குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறார் என்பதை வைத்து எப்படி அவரை நம்ப முடியும்? வெள்ளை நிறப் பெண்ணை மணந்தால் குழந்தைகள் வெள்ளையாகப் பிறக்கும் என்று நினைக்கும் சமூகம் இது.

ஆனால், அதே சமூகம்தான் ஒருவர் பார்க்க நன்றாக இருந்தால் கூட முதல் பார்வையிலேயே அவரை வில்லன் என்று தீர்மானிக்கிறது? பார்க்க சுமாராக இருக்கும் ஒருவர் சொல்வதை அப்படியே நம்புகிறது. இவ்வாறு ஜுவாலா கட்டா பதிவிட்டுள்ளார்.

சூரி அப்பாவியான தோற்றம் கொண்டிருப்பதால் அவரை நல்லவர் என்றும், விஷ்ணு அழகான பணக்கார தோற்றம் கொண்டிருப்பதால் அவரை கெட்டவர் என்றும் இந்த சமூகம் நினைப்பதாக கருதுகிறார் ஜூவாலா கட்டா. அவரின் பதிவின் சுருக்கமான பொருள் இது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பாலாவின் தம்பி தயாரிப்பாளர் ஆனார்பாலாவின் தம்பி தயாரிப்பாளர் ஆனார் பா.ஜ.வில் ஐக்கியமா? - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., விளக்கம் பா.ஜ.வில் ஐக்கியமா? - விஜய்யின் தந்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
15 அக், 2020 - 15:30 Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Vishu Vishal parka alaga irukaarunu sonna ungalukku kanparvai kolaaru irukkunu artham. Vishu Vishal LKG padathukku enna sonnarunu theriyuma ? Yaaroda padathukkellam early morning 5 o clock show kodukuradhunu oru vivasthaiye illanu social media la sollirundhaaru adhukku RJ balaji reply parthirundha neenga Inga vandhu ippadi sappota vitthukittu irukkamaateenga madam juvala Dutta.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13 அக், 2020 - 23:40 Report Abuse
Ramesh R வந்துட்டாங்க பெருசா
Rate this:
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை ஆமாம். ஜ்வாலா வை பார்த்து தவறாக எடை போட வேண்டாம்.
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
13 அக், 2020 - 21:13 Report Abuse
baygonspray அந்த மாதிரி நீ தான் நினைக்கிற, நாங்க தோலை பார்த்து முடிவு செய்வது இல்லை .
Rate this:
14 அக், 2020 - 07:14Report Abuse
chandran, pudhucherry வேற எத பாத்து முடிவு பண்ணுவீக...
Rate this:
Ramesh - Thirunagar,இந்தியா
13 அக், 2020 - 17:15 Report Abuse
Ramesh fd
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in