மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் மலையாள நடிகர் சங்கம் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மலையாள நடிகர் சங்கத்தின் சார்பில் 2வது படம் தயாரிக்கப்பட இருக்கிறது. முன்பு தயாரித்த டுவண்டி 20 படத்தின் 2வது பாகமாக இது இருக்கும். இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். ஆனால் பாவனா மட்டும் நடிக்கவில்லை. காரணம் அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அதோடு இறந்த ஒருவர் எப்படி வந்து நடிக்க முடியும் என்று கூறினார்.
அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாவனா நடிக்கவில்லை என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அவர் இறந்து விட்டார் என்று எந்த அடிப்படையில் அவர் கூறினார் என்பது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பார்வதி செயலாளர் இடைவேளை பாபுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் இருந்து விலகி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018 ஆம் ஆண்டு என் தோழிகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகினாலும் நான் விலகவில்லை. சங்கத்தை சீரமைக்க சிலராவது இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இடைவேளை பாபுவின் பேட்டியை பார்த்த பிறகு, இங்கு மாற்றம் வரும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது.
நடிகர் சங்கத்தால் கைவிடப்பட்ட பெண் உறுப்பினரை, இறந்தவருடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது, அருவெறுப்பானது. குமட்டல் மனப்பான்மையை காட்டுகிறது. இந்த விஷயத்தை மீடியா விவாதிக்கத் தொடங்கும்போது இடைவேளை பாபுவுக்கு ஆதரவாக பலர் பேசுவார்கள் என்பதும் எனக்கும் தெரியும்.
இனியும் இந்த சங்கத்தில் இருப்பதால் எந்த பலனும் இல்லை. இதனால் எனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்கிறேன். அதே நேரம் நடிகர் இடைவேளை பாபுவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதையும் பலரும் கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு நடிகை பார்வதி கூறியுள்ளார்.