Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சௌந்தர்யா பயோபிக்கில் நடிப்பாரா சாய் பல்லவி ?

12 அக், 2020 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Will-Sai-pallavi-says-yes-to-Soundarya-Biopic

ஹிந்தியில் சில்க் ஸ்மிதான் பயோபிக் படமான 'டர்ட்டி பிக்சர்' வெளிவந்த பிறகு பயோபிக் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கிய சாவித்ரியின் பயோபிக் படமான 'மகாநடி' படமும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு வேறு சில பயோபிக் படங்களும் வெளிவந்தன. தற்போது மேலும் சில படங்கள் தயாராகி வருகின்றன. தெலுங்கில் அடுத்து சில பயோபிக் படங்களை எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சௌந்தர்யா. 2004ம் ஆண்டு பாஜகவிற்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றவரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சௌந்தர்யா மறைந்தார். 31 வயதே ஆனவரின் மரணம் தென்னிந்திய திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தர்யாவின் பயோபிக்கை திரைப்படமாக எடுக்க உள்ளார்கள். அவரது கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம். அவர் நடிக்க இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் நடித்தார் பொருத்தமாக இருக்கும் என்பது படக்குழுவின் எண்ணம். அதை சாய் பல்லவி நிறைவேற்றி வைப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாடு - அடுத்த வாரம் தியேட்டர்கள் திறப்பு?தமிழ்நாடு - அடுத்த வாரம் ... பிக்பாஸ் - பரபரப்பை ஏற்படுத்தாத முதல் வாரம் பிக்பாஸ் - பரபரப்பை ஏற்படுத்தாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in