Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்

12 அக், 2020 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Soori-about-Land-foregery-issue

நிலம் வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் ரூ.2.70 கோடி பணமோசடி செய்து விட்டதாக காமெடி நடிகர் சூரி, 'வீரதீரசூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை விஷ்ணு விஷால் மறுத்துள்ளார்.

இதுகுறித்து சூரி கூறியிருப்பதாவது: வீர தீர சூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்தபோது சம்பளத்திற்கு பதிலாக நிலம் வாங்கித் தருவதாக கூறினார்கள். நிலத்துக்கு பத்திரபதிவு செய்யும்போது சம்பளத்தை கழித்துக் கொண்டு மீதி பணத்தை தந்தால் போதும் என்றார்கள். இதை நான் நம்பினேன். நிலம் வாங்க ரூ.2.70 கோடி வரை கொடுத்தேன். ஆனால் ஏமாற்றப்பட்டு விட்டேன்.

இது பற்றி வெளியே எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி, பணத்தை திருப்பி அளிப்பதாக கூறினார்கள். 2015 முதல் 2017 வரை பொறுமையாக இருந்தேன். ஆனால், அதன் பிறகு அவர்கள் மீது நம்பிக்கை இழந்தேன். பாதையில்லாத இடத்தை சில தவறான ஒப்பந்தம் மூலமாக வாங்கி நான் ஏமாற்றப்பட்டேன். ஒவ்வொரு நாளும் இதிலிருந்து மீண்டு வர மாட்டோமா என வேண்டிக் கொண்டே இருந்தேன். கடன் பெற்றுதான் அந்த இடத்தை வாங்கினேன்.

பணத்தை திருப்பித் தரும் எண்ணத்திலேயே அவர்கள் இல்லை. நான் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர்களிடமிருந்து போன் வரும். அதன்பின் என்னால் நடிக்கவே முடியாது. என்னுடைய திறமை எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன். 5 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். கடவுளை நம்பினேன். நல்ல முடிவு கிடைக்கவில்லை. இப்போது நீதிமன்றம் தான் எனக்கு தெய்வம். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை; நல்லதே நடக்கும்.

இவ்வாறு சூரி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைகள் சஞ்சனா, ராகிணி சிறைக்குள் சண்டைநடிகைகள் சஞ்சனா, ராகிணி சிறைக்குள் ... இளையராஜா இசையில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை சினிமாவாகிறது இளையராஜா இசையில் முத்துராமலிங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 அக், 2020 - 04:18 Report Abuse
J.V. Iyer வடிவேலு ஏமாந்த கதை தெரிந்தும், ஏமாறலாமா இவர்? பாவம்.
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18 அக், 2020 - 03:43 Report Abuse
Dr.C.S.Rangarajan பிறருக்காக 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என வாழும் சமுதாயத்தில் சட்டங்களே தேவை இல்லை' 'தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்' என தன்னை முதன்மை படுத்தி வாழும் சமுதாயத்தில் சட்டங்கள் இல்லாது வாழ்வமையாது என்கிறார் ஒரு தத்துவ ஞானி. நமக்காகவே நாம் வாழும் நிலைமைக்கு உறவுமுறை மாற்றங்கள் ஏற்பட்டது எதனால்?
Rate this:
Ramona - london,யுனைடெட் கிங்டம்
16 அக், 2020 - 23:29 Report Abuse
Ramona பரோட்டா வால் பிரபலம் அடைந்து, அதே போல் கொத்து பரோட்டா ஆகிவிட்டார் பாவம்,ப்ளான் பன்னி ஏமாற்றும கூட்டம் ,கூடவே இருந்து, கடைசியில் கடன்காரர் ஆகி நொந்து விட்டார், இது கலி காலம் நம்ம தான் உஷாரா இருக்கனும்..நீதி கிடைக்க பல வருடங்கள் ஆகலாம், போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்று வழக்கு தோற்றும் போகலாம், நம்பிக்கையை இழக்காமல் இருங்கள். கடவுள் இருக்கிறார்.
Rate this:
san san - Vijayawada,இந்தியா
16 அக், 2020 - 16:22 Report Abuse
san san இவனுக்கெல்லாம் கோடி கணக்குலே கொட்டி குடுத்தா, அதுக்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டுலே 7 கோடி உருப்படாத பயலுக சினிமா பைத்தியமா அலைவது தான் சினிமா காரனும் வாதியும் அழியட்டும் , நாட்டுக்கு நல்லதுதான்
Rate this:
ponssasi - chennai,இந்தியா
14 அக், 2020 - 16:39 Report Abuse
ponssasi நானும் சுமார் பத்து ஆண்டுகளாக நீதிக்கு காத்திருக்கிறேன். நம் நீதித்துறை வேகம் அவ்வளவு.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in