எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் | மாஸ்டர் குறித்த விமர்சனம்- லோகேஷ் கனகராஜ் பதில்! | தி பேமிலிமேன்-2 - சமந்தாவின் எதிர்பார்ப்பு | மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கிலும் விஜயசேதுபதி? | அஜீத்தின் வலிமை டீசர் எப்போது? அதிரடி அப்டேட் | விஜய் சேதுபதி பற்றி அன்றே கணித்த கார்த்திக் சுப்பராஜ் | அம்மாவாக நடிக்கத் தயக்கமில்லை - ஸ்ருதிஹாசன் | சிம்புவை இயக்கும் சூர்யா பட டைரக்டர்? | எல்லையை விஸ்தரிக்கும் விஜய் சேதுபதி | தெலுங்கில் 2ம் இடம் பிடித்த 'மாஸ்டர்' |
நடிகர் தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆனந்த் எல்.ராய். அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'அட்ரங்கி ரே' என்கிற படத்தில் மீண்டும் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இணைந்துள்ளனர்.
இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படம் ஆகும். அதுமட்டுமல்ல பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமாரும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 1ஆம் தேதி துவங்கிய நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த பெல்பாட்டம் படப்பிடிப்பில் நடித்து வந்த அக்சய் குமார், சமீபத்தில் மும்பை திரும்பிய நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் உடன் நடித்தவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.