Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி "இரண்டாம் குத்து" போன்ற அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்கப் போவதில்லை: சாம்ஸ்

11 அக், 2020 - 17:40 IST
எழுத்தின் அளவு:
In-future-i-will-not-act-this-type-of-adult-film-says-Actor-Sams

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை "இரண்டாம் குத்து" என்ற பெயரில் எடுத்து, அதில் நாயகனாகவும் அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். சமீபத்தில் வெளியான அப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலருக்கு எதிர்ப்புகளும், கண்டனக் குரல்களும் அதிகரித்துள்ளன. ஆபாசப் படங்களையே மிஞ்சும் அளவிற்கு மோசமாக உள்ளதால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது இரண்டாம் குத்து படம்.

இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்தது தொடர்பாகவும், தான் வெளியிட்ட பதிவு தொடர்பாகவும் நடிகர் சாம்ஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “இந்த படம் சம்பந்தமாக என்னை தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன்... அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தது. பலரும் சொன்ன கருத்துக்கள் என் நல விரும்பிகள் சொன்ன அட்வைஸ்களை வைத்து தற்போது என் கருத்தை என் முடிவை சொல்லவே இந்த பதிவு.

என் கருத்து
-----------------------
இதுபோன்ற அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களில் டிவிகளில் செல்களில் கம்ப்யூட்டர்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதேபோன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த, சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்த படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா நீ செய்வீயா? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை... அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பு பதிவு கூட நான் போட்டதில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதை தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்கும் தகுதி அருகதை நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன்.

என் முடிவு
--------------------
இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன் . அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாக தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்..

A படம் என்று சென்சார் சர்டிபிகேட்டோடு வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன ? என்று தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி "இரண்டாம் குத்து" போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன்... தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து” என இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
திண்டுக்கல்லில் ஒரே கட்டமாக நடக்கும் சுசீந்திரன் - சிம்பு பட படப்பிடிப்பு!திண்டுக்கல்லில் ஒரே கட்டமாக ... கவர்ச்சியில் இறங்கிய ராஷி கண்ணா கவர்ச்சியில் இறங்கிய ராஷி கண்ணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

M.Sam - coimbatore,இந்தியா
12 அக், 2020 - 09:11 Report Abuse
M.Sam ஏன் சாம்ஸ் சார் சம்பளம் கம்மியா குடுத்துட்டாங்களா
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
12 அக், 2020 - 08:32 Report Abuse
S Bala அதுல வருது, இதுல வருதுன்னு சில அல்ப மனிதர்கள் பேசுவது அசிங்கம்.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12 அக், 2020 - 07:55 Report Abuse
VENKATASUBRAMANIAN எதுவும் இலை மறைவு காய் மறைவாக இருக்க வேண்டும். 13 முதல் 15வயது வரை தடுமாறும் வயது. அவர்களை தூண்டும் விதமாக இருக்க கூடாது.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12 அக், 2020 - 07:49 Report Abuse
VENKATASUBRAMANIAN வாழ்த்துக்கள். திருந்தியத்திற்கு. இது போன்று மற்ற நடிகர்கள் இயக்குனர்களும் திருந்த வேண்டும். சமுதாய உணர்வு வேண்டும். எல்லோருக்கும் குடும்பம் உண்டு. முதலில் அவர்கள் இந்த படத்தை தங்கை அம்மா பெண்கள் ளுடன் சேர்ந்து பார்ப்பார்களா. அதை யோசிக்க வேண்டும்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
12 அக், 2020 - 06:22 Report Abuse
sankar இனிமே நீங்க நடிச்சா அது மூனான் குத்து
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in