சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற ஆபாச படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்து இயக்கி, நடித்துள்ள படம் இரண்டாம் குத்து. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையே மிகவும் கீழ்த்தரமாக, ஆபாசமாக வெளியிட்டார் சந்தோஷ். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதோடு அடுத்து வெளியிட்ட டீசரில் ஆபாசமும், வக்கிரமும் நிறைய காட்சிகளும், வனசங்களும் நிறைந்து இருந்தன. இதற்கு திரையுலகினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா இப்படத்தின் போஸ்டரை சுட்டிக்காட்டி கடுமையான அறிக்கை வெளியிட்டார். இப்படத்தின் போஸ்டரை கண்ணில் பார்க்கவே கூசுகிறது. இப்படி ஒரு படத்தை எடுத்தவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லையா, சினிமாவில் மூத்த கலைஞன் என்ற முறையில் நான் இதை கண்டிக்கிறேன் என கூறியிருந்தார்.
இதற்கு சந்தோஷ் பதிலடியாக, டிக் டிக் டிக் படம் வெளியான போது கூசாத கண்கள் இப்போது கூசுகிறதா.... என டுவிட்டரில் பதிவிட்டார். பாரதிராஜாவை அவமதித்து கிண்டலாக பதிவிட்டதற்கும் சேர்த்து சந்தோஷ் மீது வெறுப்புணர்வு அதிகமானது. பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : இரண்டாம் குத்து படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீசருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது டுவிட்டர் பதிவில் ஒரு டுவீட் போட்டுவிட்டேன். அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவரின் சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்ய மாட்டோமா என்று பலரும் பணிபுரிகிறார்கள். பல இயக்குநர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்துள்ளார், எப்போதும் இருப்பார். அவரின் அறிக்கைக்கு நான் அப்படி எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்"
இவ்வாறு தெரிவித்துள்ளார்.