துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய நடிகர்களில் அதிக வசூலைக் கொடுப்பதில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். 1992ம் ஆண்டு வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
விஜய் நாயகனாக அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 28 வருடங்களில் ஒரு ஆண்டு கூட இடைவெளி இல்லாமல் விஜய் நடித்த படங்கள் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒன்றாவது வெளிவந்திருக்கிறது.
அதிகபட்சமாக 1996ம் ஆண்டு 5 படங்கள் வெளிவந்துள்ளது. கடந்த சில வருடங்களாகத்தான் வருடத்திற்கு ஒரு படம் என குறைத்துக் கொண்டார். 2017ல் மட்டும் இரண்டு படங்கள் வெளிவந்தன. கடந்த இரண்டு வருடங்களாக ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்தது.
இந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதியே 'மாஸ்டர்' படம் வெளிவர வேண்டியது. ஆனால், கொரானோ காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் வரவில்லை. இந்த வருடம் முடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ளது. தியேட்டர்கள் அடுத்த சில வாரங்களில் திறக்கப்பட்டாலும் 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவார்களா என்பது தெரியவில்லை. இல்லையென்றால் 2021ல்தான் படம் வெளியாகும்.
அப்படி ஒரு நிலை வந்தால் கடந்த 28 வருடங்களாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வந்த விஜய்க்கு இந்த வருடம் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடும். அப்படி நடக்குமா, நடக்காதா என்பது விரைவில் தெரியும்.