Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கொரோனாவிலிருந்து மீண்ட துல்கர் பட நாயகி

10 அக், 2020 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Actress-Gauthami-Nair-tested-corona-negative

இந்த கொரோனா தாக்கத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் ஆளாகி உள்ளனர். பெரும்பாலும் பலர் அதிலிருந்து மீண்டு வந்து உள்ளனர். சமீபத்தில் தமன்னா உட்பட பெரும்பாலும் நடிகர்களோ, நடிகைகளோ கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே அது குறித்து, சோசியல் மீடியாவில் தங்களுக்கு கொரோனா என்கிற விஷயத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக மலையாள திரையுலகைச் சேர்ந்த கவுதமி நாயர் என்கிற நடிகை, கடந்த மாதம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிப்போர்ட் வந்த நிலையில் அதை வெளியில் தெரிவிக்காமல் தற்போது முற்றிலும் குணமாகியபின் கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ள நிலையில் அதனை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த கவுதமி நாயர், துல்கர் சல்மான் அறிமுகமான செகண்ட் ஷோ என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான். அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவரைத் தான் கடந்த வருடம் இவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் தன்னுடைய மருத்துவ நண்பரை சந்தித்து அங்கிருந்த கேண்டில் ஒன்று உணவருந்திக் கொண்டு உரையாடி 8 வந்துள்ளார் கவுதமி நாயர்

அடுத்த இரண்டு தினங்களுக்குள் அந்த மருத்துவ நண்பர் கவுதமிக்கு போன் செய்து, தனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்து இருப்பதாகவும் அதனால் கவுதமியும் ஒரு டெஸ்ட் செய்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி பரிசோதனை மேற்கொண்டபோது தான், தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்கிற ரிசல்ட் கவுதமிக்கு தெரியவந்துள்ளது. அதேபோல கவுதமியின் தங்கைக்கும் பாசிட்டிவ் பாதிப்பு தெரியவந்தது. இதை அப்போதே வெளியில் சொன்னால் தேவையில்லாத ஒரு பரபரப்பு ஏற்படும் என்பதாலும் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்கிற செய்தியை அப்போது வெளியில் சொல்லவில்லை என்று கூறியுள்ளார் கவுதமி நாயர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.2 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய பஹத் பாசில்ரூ.2 கோடி மதிப்பில் புதிய கார் ... சிரஞ்சீவி சார்ஜா படத்தை திரையிட்டு இயங்க துவங்கும் கன்னட திரையுலகம் சிரஞ்சீவி சார்ஜா படத்தை திரையிட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in