மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பர் மஞ்சு வாரியார். நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கி விட்டார்.
இவர் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ படம் தமிழி ஜோதிகாக நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில ரீமேக் ஆனது. இந்த படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் மஞ்சு வாரியர் மீண்டும் நடித்திருக்கும் படம் தான் பிரதி பூவன்கோழி. கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியருடன் அனுஸ்ரீ, சாஜு குரூப், கிரேஷ் ஆண்டனி நடித்தனர்.
ஜவுளிக் கடையில் வேலை செய்யும் மஞ்சுவாரியர் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர். தினமும் பஸ்சில் பயணம் செய்பவர். ஒரு நாள் பஸ்சில் பயணம் செய்யும்போது ஒருவன் அவரை பாலியல் சீண்டல் செய்ய அவரை பஸ்சை விட்டு இறக்கி அடித்து துவைத்து விடுகிறார். அடிபட்ட அவன் ஒரு பிரபல ரவுடியின் முக்கியமான கையாள்.
அதன்பிறகு அந்த பிரபல ரவுடிக்கும், மஞ்சுவாரியாருக்கும் இடையில் நடக்கும் விஷயங்கள் தான் படம். பெண்கள் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது துணிந்து போராட வேண்டும் என்று சொல்லுகிற படம்.
தற்போது இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ரீமேக் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை வாங்கி அதில் தன் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைத்து வருகிறார். இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகிறது.
மலையாளத்தில் வெளிவந்த ஹெலன், அய்யப்பனும் கோஷியும், ஜோசப், டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்கள் தமிழில் ரீமேக் ஆகிறது.