‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஷிகா மல்கோத்ரா. அவர் அறிமுகமாகி சில படங்களில் ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழி என்று நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கொரோனா தொற்று பிரச்சினை வந்தது. வர்தமான் மஹாவீர் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்திருந்த ஷிகா கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்ள தான் படித்த அதே மருத்துவ கல்லூரியின் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றார்.
நடிப்பை விட நாட்டுக்கு சேவை செய்வது முக்கியம். ஒரு நர்ஸ்சாக இந்த கொரோனா காலத்தில் என் பணி மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் கூறியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
"நான் மிகமிக கவனமாக இருந்தும் எனக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தனது இன்ஸ்ட்ராகிராமில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.