Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஐயாம் வெரி சாரி' - மாதவன் கேட்ட மன்னிப்பு

10 அக், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Madhavan-says-apology

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சைலன்ஸ்'. தெலுங்கு, தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தைப் பற்றி மிகப் பெரிய பில்டப் கொடுத்தார்கள். ஆனால், படம் வெளியாகி படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு சராசரிக்கும் கீழான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவே இருந்தது. இந்தப் படத்திற்கா இப்படி பில்டப் கொடுத்தார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் நேற்று காலையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் லைவ் சாட் செய்தார் மாதவன். அப்போது சில ரசிகர்கள் “இந்தப் படத்தில் எதற்காக நடித்தீர்கள், பிளாஷ்பேக்கில் உங்கள் பகுதி சிறப்பாக அமையவில்லை” என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்கள்.

அதற்கு மாதவன், “சில சமயம் வெற்றி பெறுவோம், சில சமயம் தோல்வியடைவோம். என்ன சொல்வது, எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்தோம். மொத்தத்தில் நான் சொல்ல விரும்புவது, “ஐயாம் வெரி சாரி” என்று பதிலளித்தார்.

படத்தின் பிரமோஷனுக்காக மாதவன் செய்ய நினைத்த இந்த லைவ் சாட் கடைசியில் படத்திற்கு எதிராகவே முடிந்துவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முத்தையா முரளிதரன் படம் - விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்முத்தையா முரளிதரன் படம் - விஜய் ... நடிகர் சங்க தேர்தல் நடத்த தடை நீடிப்பு: வழக்கை புதிய அமர்வு விசாரிக்கிறது நடிகர் சங்க தேர்தல் நடத்த தடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in