Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தையா முரளிதரன் படம் - விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்

10 அக், 2020 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Seenu-Ramasamy-request-to-Vijaysethupathi

தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் இயல்பாக நடிப்பவர் எனப் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தார்.விஜய் சேதுபதி அடுத்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தில் அவர் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அப்படத்தில் நடிப்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்தவுடன் இந்த விவகாரம் காரசாரமாகி வருகிறது.விஜய் சேதுபதிக்கு கதாநாயகன் அந்தஸ்து கொடுத்த சீனு ராமசாமியும் டுவிட்டரில் அவருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில்,

“விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்


விஜய் சேதுபதி நடிக்கும்

யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.

ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.

உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா..

நீரே எங்கள்

தமிழ் சொத்து அய்யா

நமக்கெதற்கு மாத்தையா?

மாற்றய்யா? , எனப் பதிவிட்டுள்ளார்.

இலங்கை இனப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்தைச் சொன்னதற்கும், ராஜபக்சேவை ஆதரித்தும் முத்தையா முரளிதரன் செயல்பட்டதற்கு இலங்கைத் தமிழர்கள் பலரும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது இந்த பயோபிக் பட விவகாரத்தில் அந்த எதிர்ப்பு அலை மீண்டும் வந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலிக்குக் குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்ராஜமவுலிக்குக் குவியும் பிறந்தநாள் ... 'ஐயாம் வெரி சாரி' - மாதவன் கேட்ட மன்னிப்பு 'ஐயாம் வெரி சாரி' - மாதவன் கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mei - கடற்கரை நகரம்,மயோட்
11 அக், 2020 - 10:21 Report Abuse
mei கூத்தாடி எப்படி ஆடினால் என்ன?
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
11 அக், 2020 - 10:20 Report Abuse
mei மனநலத்தை சரிபார்க்கவும்
Rate this:
Nachiar - toronto,கனடா
11 அக், 2020 - 02:40 Report Abuse
Nachiar தமிழக தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கையில் நான்கு பாரம்பரிய ரீதியாக பிரிக்கப்படக்கூடிய தமிழர்கள் உண்டு. ஈழத்தமிழர் எனப்படும் யாழ்பாணத்தவர் கிழக்கில் மட்டக்களப்பு தமிழர்கள் மேட்கில் மன்னார் தமிழர்கள் மத்தியில் இந்தியா வம்சாவளி மலையக தமிழர். இதில் யாழ்ப்பாண தமிழரகளை விட ஏனையோர் தம்மை ஈழத்து தமிழர் என வகை படுத்துவதில்லை, பெரும்பாண்மையாக பயங்கரவாத புலிகளுடன் தம்மை இணைப்பதுவும் இல்லை. அதிலும் சிறப்பாக மலையகத் தமிழர் யாழ்பாணத்தவருடன் இணைவதையோ உறவு வைப்பதையோ விரும்புவதில்லை. காரணம் பிரிட்டிஷாருக்குப் பிறகு யாழ்பாணத்தவர்களால்அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யாழ்பாணத்தவர்களால் தொழில் கல்வி துறைகளில் சுரண்டப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள். உண்மையான தமிழகத்தின் தொப்புள் கோடி உறவுகள் மலையத்தவர்களே. முரளிதரன் சொன்னது பிரபாகரன் இறந்த நாள் தன் வாழ்க்கையில் ஒரு முக்கிய நாள் என்று மட்டும்தான். இது முரளிதரனின் சொல் மட்டும் அல்ல. பல மலையக மட்டக்களப்பு மன்னார் தமிழர்களின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய சந்தோசமான நாளே. கடந்த தேர்தலில் யாழ்பாண மக்களே உணர்த்திய உண்மை இது. Breaking of India சக்திகளில் அடையாளம் காட்டப்பட்ட சக்திகள்: விடுதலை புலிகள், கிறிஸ்தவ சர்ச் மதம் பரப்பும் அமைப்புகள், நஸ்க்சாலைட் போன்ற இடது சார அமைப்புக்கள், இஸ்லாமிய மதம் பரப்பும் அமைப்புக்கள், கம்யூனிச பயங்கர வாத அமைப்புகள் ஆகும். விடுதலை புலிகள் உண்மையில் ஒரு கிறிஸ்தவ பிரித்தாளும் சக்தியின் அமைப்பு தான். சந்தேகம் இருந்தால் இந்த தலைப்பில் இணையத்தில் தேடி பார்க்கவும். முத்தையா முரளிதரன் ஒரு இந்திய தொப்புள் கோடி உறவு உடைய உலகறிந்த விளையாட்டாளர் மட்டுமல்ல பல ஏழைகளுக்கு கொடுத்து உதவிக்கொண்டிருக்கும் கொடையாளி. . தேசியத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் இயங்கும் ஒரு நல்லவர். பயங்கரவாத கொடுங்கோன்மை உள்ளம் கொண்டவர் அல்ல. வாழ்க முரளிதரன். தீர அறிந்த பின் முடிவு எடுக்க வேண்டியது ஒருவரின் கடமை. தமிழக தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கையில் நான்கு பாரம்பரிய ரீதியாக பிரிக்கப்படக்கூடிய தமிழர்கள் உண்டு. ஈழத்தமிழர் எனப்படும் யாழ்பாணத்தவர் கிழக்கில் மட்டக்களப்பு தமிழர்கள் மேட்கில் மன்னார் தமிழர்கள் மத்தியில் இந்தியா வம்சாவளி மலையக தமிழர். இதில் யாழ்ப்பாண தமிழரகளை விட ஏனையோர் தம்மை ஈழத்து தமிழர் என வகை படுத்துவதில்லை, பெரும்பாண்மையாக பயங்கரவாத புலிகளுடன் தம்மை இணைப்பதுவும் இல்லை. அதிலும் சிறப்பாக மலையகத் தமிழர் யாழ்பாணத்தவருடன் இணைவதையோ உறவு வைப்பதையோ விரும்புவதில்லை. காரணம் பிரிட்டிஷாருக்குப் பிறகு யாழ்பாணத்தவர்களால்அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யாழ்பாணத்தவர்களால் தொழில் கல்வி துறைகளில் சுரண்டப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள். உண்மையான தமிழகத்தின் தொப்புள் கோடி உறவுகள் மலையத்தவர்களே. முரளிதரன் சொன்னது பிரபாகரன் இறந்த நாள் தன் வாழ்க்கையில் ஒரு முக்கிய நாள் என்று மட்டும்தான். இது முரளிதரனின் சொல் மட்டும் அல்ல. பல மலையக மட்டக்களப்பு மன்னார் தமிழரகளின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய சந்தோசமான நாளே. கடந்த தேர்தலில் யாழ்பாண மக்களே உணர்த்திய உண்மை இது. Breaking of India சக்திகளில் அடையாளம் காட்டப்பட்ட சக்திகள்: விடுதலை புலிகள், கிறிஸ்தவ சர்ச் மதம் பரப்பும் அமைப்புகள், நஸ்க்சாலைட் போன்ற இடது சார அமைப்புக்கள், இஸ்லாமிய மதம் பரப்பும் அமைப்புக்கள், கம்யூனிச பயங்கர வாத அமைப்புகள் ஆகும். விடுதலை புலிகள் உண்மையில் ஒரு கிறிஸ்தவ பிரித்தாளும் சக்தியின் அமைப்பு தான். சந்தேகம் இருந்தால் இந்த தலைப்பில் இணையத்தில் தேடி பார்க்கவும். முத்தையா முரளிதரன் ஒரு இந்திய தொப்புள் கோடி உறவு உடைய உலகறிந்த விளையாட்டாளர் மட்டுமல்ல பல ஏழைகளுக்கு கொடுத்து உதவிக்கொண்டிருக்கும் கொடையாளி. . தேசியத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் இயங்கும் ஒரு நல்லவர். பயங்கரவாத கொடுங்கோன்மை உள்ளம் கொண்டவர் அல்ல. வாழ்க முரளிதரன். தீர அறிந்த பின் முடிவு எடுக்க வேண்டியது ஒருவரின் கடமை.
Rate this:
அருணாசலம், சென்னை இவனெல்லாம் ஒரு ஆள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in