18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின், 2020 - 2022ம் ஆண்டுக்கான தேர்தல், நவ., 22ம் தேதி நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் இத்தேர்தல், சென்னை, அடையாறு, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தை, வரும், 15ம் தேதி முதல், 23ம் தேதி வரை, 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, 16ம் தேதி முதல், 23ம் தேதி வரை, சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.அக்., 24 முதல், 29ம் தேதி வரை, விண்ணப்பங்களை திரும்ப பெறலாம். 29ம் தேதி மாலை இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.தலைவர் பதவிக்கு, 1 லட்சம் ரூபாயும், மற்ற நிர்வாகிகள் பதவிக்கு, 50 ஆயிரம் ரூபாயும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 10 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.