ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றவர்.
திடீரென தமிழ்ப் படங்களிலிருந்து மொத்தமாக ஒதுங்கிவிட்டார். அவர் கதாநாயகியாக நடித்து முடித்த 'யங் மங் சங்' படம் முடிந்தும் இன்னும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.
சமீப காலங்களில் அவருடைய பல புகைப்படங்களைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சர்ச்சையான வீடியோ ஒன்றைப் பதிவிட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இப்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் 'பேச்சி' படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடியில்தான் வெளியாகும் என்கிறார்கள். அடுத்த வருடம் இப்படம் வெளியாக உள்ளது.