Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரித்விராஜ் படத்திற்கு பதிலடி தர தயாராகும் சுரேஷ்கோபி படக்குழு

09 அக், 2020 - 18:56 IST
எழுத்தின் அளவு:
பிரித்விராஜ்-படத்திற்கு-பதிலடி-தர-தயாராகும்-சுரேஷ்கோபி-படக்குழு

மலையாளத்தில் தற்போது சுரேஷ்கோபியின் 250 வது படம் தயாராகி வருகிறது. இந்தப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த, தற்போதும் உயிருடன் இருக்கின்ற கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. அதேசமயம் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் இதே நபரை மையப்படுத்தி கடுவா என்கிற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது, சுரேஷ்கோபி படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தின் டைட்டிலும், இது யாருடைய கதையாக உருவாகிறது என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகிவிட்டது,

அதனால் கடுவா படத்தின் கதாசிரியர் ஜினு ஆபிரகாம், சுரேஷ்கோபி படத்தை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளார். இந்தநிலையில் கடுவா படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. சுரேஷ்கோபி படத்தின் மீதான படப்பிடிப்பு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், பிரித்விராஜ் படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சுரேஷ்கோபியின் பட டைட்டில் என்னவென்று இன்னும் சில தினங்களில் அறிவிக்க இருக்கிறார்களாம். இதற்கு முன்னோட்டமாக இதுகுறித்த ஒரு முன்னறிவிப்பு போஸ்டரையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப்படத்தை தயாரிக்கும் பிரபல முலக்குப்பாடம், பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். இவர்கள்தான் புலிமுருகன் என்கிற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்குக்கு பின் வெளியாகும் முதல் இந்திய படம் லவ்ஊரடங்குக்கு பின் வெளியாகும் முதல் ... ரூ.2 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய பஹத் பாசில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய கார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in