Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த சிம்பு - வைரலாகும் புகைப்படங்கள்

09 அக், 2020 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Simbu-workship-at-Madurai-Meenakshi-Amman-Temple

சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இப்படம் துவங்கும் முன்னதாக அவர் உடல் எடையைக் குறைக்க வெளிநாடு சென்று வந்தார். ஆனாலும் அவர் உடல் எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

இந்நிலையில் தான் ஊரடங்கு நேரத்தில் சிம்பு தனது உடல் எடையைப் பெருமளவு குறைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அவர் தற்போது 100 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது புதிய தோற்றத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். சிம்புவின் புதிய உடல் எடைக் குறைந்த போட்டோவை வெளியிட வேண்டும் என போஸ்டர் கூட ஒட்டினார்கள்.

இது ஒருபுறம் இருக்க விரைவில் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் சிம்பு. அதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடக்கிறது. இதற்காக மதுரை வந்த சிம்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்துள்ளார் சிம்பு. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் சிம்பு உடல் எடைக் குறைந்து மெலிந்து காணப்படுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிம்புவின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் தந்தை மீது பொய் குற்றச்சாட்டு: விஷ்ணு விஷால் விளக்கம்என் தந்தை மீது பொய் குற்றச்சாட்டு: ... தமிழ் நடிகர்களின் நடிப்பில் உருவான தெலுங்கு ஆந்தாலாஜி படம் தமிழ் நடிகர்களின் நடிப்பில் உருவான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in