துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவு வழி சகோதரி மன்னாரா சோப்ரா. 6 வருடங்களுக்கு முன்பு ஜித் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானார். பிரேமா கீமா ஜனந்தா நய் என்ற தெலுங்கு படத்த்திலும் அறிமுகமானார். ஆனால் அக்கா பிரியங்கா சோப்ரா போல வளர முடியவில்லை.
ஆனாலும் சில தெலுங்கு படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார். தமிழில் வெளியான காவல் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் மன்னாரா சோப்ரா, கவர்ச்சி நடிகையாக வலம் வர விரும்புகிறாரோ என்னவோ, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும், மக்கள் தொடர்பாளர்கள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ளார். ஹீரோயின் என்று இல்லாமல் தனக்கு பொருத்தமான கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் மன்னாரா சோப்ரா.