Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேறி வருகிறார் டொவினோ தாமஸ்

09 அக், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-recovering-well

மலையாளத்தில் முன்னணி இளம் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார். தற்போது ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்து வரும் மலையாளத் திரைப்படம் களா. இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சி ஒன்றை எர்ணாகுளம் அருகில் படமாக்கினார்கள். அப்போது சண்டை கலைஞர் ஒருவர் நிஜமாகவே மிதித்ததில் டொவினோ தாமஸுக்கு அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவருக்கு வயிற்றுக்குள் ரத்த கசிவு இருந்தது. நுரையீரலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டொவினோவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
டொவினோ தாமஸ் எங்கள் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அக்டோபர் 7ம் தேதி காலை 11.15 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கடும் வயிற்று வலி இருந்தது, உடனே அவருக்கு சிடி ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு வயிற்றுக்குள் குடலைச் சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது.

அவருக்கு ரத்தப்போக்கு இல்லை என்பதால் 48 மணி நேரக் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவருக்கு ஆன்ட்டிபயாடிக்குகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம்.

கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. மீண்டும் ரத்தப்போக்கு ஏற்படும் அறிகுறிகள் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு சி.டி. ஆஞ்சியோகிராம் எடுக்கவிருக்கிறோம். அதுவரை அவர் ஐசியுவில் கண்காணிப்பில் இருப்பார். அவரது உடல்நிலை மோசமடைந்தால் உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சை செய்வோம். இப்போதைக்கு அவர் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூளை கட்டி பிரச்சினையில் இருந்து மீண்ட சரண்யாமூளை கட்டி பிரச்சினையில் இருந்து ... ஹீரோக்களுக்காக கதை எழுதுவதில்லை: எஸ்.பி.ஜனநாதன் ஹீரோக்களுக்காக கதை எழுதுவதில்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in