Advertisement

சிறப்புச்செய்திகள்

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா? | ஒன்றாக எதிர்த்து போராடுவோம் - ரகுல் பிரீத் சிங் | சரியான நேரத்தில் உதவி செய்து 30 உயிர்களை காப்பாற்றிய சோனு சூட் | இரண்டாவது அலையை தியேட்டர்கள் சமாளிக்குமா ? | சிவகார்த்திகேயன் படங்களின் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மரணம் | கொரோனாவை சமாளிக்க ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் | 40 வருட தெலுங்குப் பயணத்தை நினைவு கூர்ந்த ராதிகா | கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூளை கட்டி பிரச்சினையில் இருந்து மீண்ட சரண்யா

09 அக், 2020 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Saranya-sasi-recovered

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்திலும், தமிழிலும் ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதன்பிறகு அவர் பினு சேவியர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் படங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வந்தார். அவருக்கு மூளையில் மீண்டும் கட்டி உருவானது அதனால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கு நடிகர், நடிகைகள் பண உதவி செய்தார்கள்.

கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரன், நடிகை சீமா, ஜி நாயர் ஆகியோர் சரண்யாவை காப்பாற்ற தொடர்ந்து போராடினார்கள். சரண்யாவுக்கு 7 முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் கடைசி ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு ஓரளவிற்கு குணமான சரண்யாவுக்கு பிசியோதெரபி சிசிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நடக்கவும், பேசவும் செய்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சரண்யா ஓரளவிற்கு குணமாகி விட்டாலும் அவர் இனி நடிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள். ஆரம்பத்தில் நடிகர், நடிகைகள் உதவினாலும் தற்போது பெரும் தொகையை மருத்துவத்திற்கு செலவழித்து விட்டு, அடுத்து நடித்து சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்து நிற்கிறார் சரண்யா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்புமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: ... தேறி வருகிறார் டொவினோ தாமஸ் தேறி வருகிறார் டொவினோ தாமஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
11 அக், 2020 - 18:14 Report Abuse
Bhaskaran பாவம் .மீண்டும் தொலைக்காட்சி தொண்டர்களிலாவது வாய்ப்புக்கிடைக்கட்டும்
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 அக், 2020 - 11:42 Report Abuse
LAX சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் புகைப்படம் வெளியானதில் என்னய்யா பரபரப்பு.. - செய்தியாளர் சேவைக்கு ஒரு அளவே இல்லயா..? ஹய்யோ..
Rate this:
09 அக், 2020 - 22:37 Report Abuse
Ranjit Kumar Dont worry, Get well soon. God is there and Stay Strong
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in