Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"இரண்டாம் குத்து" படம் எடுத்தவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? - பாரதிராஜா கண்டனம்

08 அக், 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Irandam-kuthu-movie-:-bharathiraja-angry-statement

தமிழ் சினிமாவில் வெளிவந்த கீழ்த்தரமான இரண்டு படங்களான 'ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கம், நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இரண்டாம் குத்து'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இப்போது டீசரை இன்னும் ஆபாசமாக, வக்கிரமான காட்சிகளுடன் வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இப்படம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை :

சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும் தான்... ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?

சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.

சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்...? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாசம், வக்கிரம்....! - இரண்டாம் குத்து டீசருக்கு பலத்த எதிர்ப்புகள்ஆபாசம், வக்கிரம்....! - இரண்டாம் குத்து ... 'சுல்தான்' படப்பிடிப்பு நிறைவு 'சுல்தான்' படப்பிடிப்பு நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

THENNAVAN - CHENNAI,இந்தியா
11 அக், 2020 - 18:26 Report Abuse
THENNAVAN வரவர கருணாநிதி போல ,காலம்கடந்தபின் காருண்யம் பேசுவது என்ன நியாயமோ அது பற்றி கூத்தாடிகள் இனம் வேதம் பேசுவது சகிக்க முடியலை.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
11 அக், 2020 - 15:10 Report Abuse
siriyaar அவர்களுக்கு எப்படி இது தப்பு என்று தெரியும்.
Rate this:
Gurumoorthy Padmanaban - chennai,இந்தியா
10 அக், 2020 - 10:15 Report Abuse
Gurumoorthy Padmanaban முதன்முறையாக பாரதிராஜா ஒரு நல்ல விஷயம் கூறி இருக்கிறார். இதுவே இந்த மண்ணின் பெருமை. பெண்ணியம் காக்கபடவேண்டும் என்பது தமிழ்நாட்டின் அடிப்படை கொள்கை. பாரதிராஜாவிடம் நான் பல விஷயங்களில் வேறுபட்டு இருந்தாலும் அவருடைய இந்த கருத்தை நான் மனதார வரவேற்கிறேன். பாரதிராஜாவின் இந்த கருத்தை தயவு கூர்ந்து பரப்புங்கள் நண்பர்களே. எது எதையோ வெட்டியாக பரப்பும் நாம் இந்த பயனுள்ள கருத்தை நண்பர்களிடம் பகிர்வோம்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09 அக், 2020 - 16:49 Report Abuse
Endrum Indian ஆமா எங்க வாட்ஸ் ஆப் க்ரூபில் ஒருவன் எப்போ பார்த்தாலும் செக்ஸ் பற்றி தான் மெஸேஜ் அனுப்புவான் இத்தனைக்கும் எஞ்சினீர் ஆர்மியில் வேலை செய்தவன் அதாவது சிலர் இப்படித்தான் அவர்களை திருத்தவே முடியாது ஆனால் சினிமா தொழில் முறை தானே அது நல்லது என்று எவ்வளவு நடித்தாலும் நடக்கவே நடக்காது
Rate this:
JK THAMIL - COIMBATORE,இந்தியா
09 அக், 2020 - 14:55 Report Abuse
JK THAMIL சரியாக சொன்னீங்க பாரதிராஜ ஐயா, சினிமா மக்களுக்கு கற்று கொடுத்த காலம் போய் இன்று அடுத்த தலைமுறையை கெடுத்து கொண்டு உள்ளது (இந்த படத்தை கதை எழுதி இயக்கியவன் குடும்பத்தையும்) ஒரு சில சினிமா வியாபாரிகளால் இதை எல்லாம் கேட்க இங்கே எந்த தலைவனும் இல்லை .....
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in