Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆபாசம், வக்கிரம்....! - இரண்டாம் குத்து டீசருக்கு பலத்த எதிர்ப்புகள்

08 அக், 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Vulgur-dialogues-and-scene---Irandam-kuthu-teaser-out

இந்தியாவில் கற்பழிப்புக் குற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், சினிமாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் பல கீழ்த்தரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்று வருகின்றன. ஒரு திரைப்படத்தில் அவை இடம் பெற்றால் அவற்றைத் தடுக்க சென்சார் குழு இருக்கிறது.

ஆனால், அந்தத் திரைப்படங்களின் டீசர் யு டியுபில் வெளியானால் அதற்கு சென்சார் கிடையாது. எனவே, பரபரப்பை உருவாக்கி, ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைக்கம் யுக்தியாக ஆபாசமான வீடியோக்களை சிலர் வேண்டுமென்றே வெளியிடுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த கீழ்த்தரமான இரண்டு படங்களான ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கம், நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே கடும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில் நேற்று ஆபாச டீசர் ஒன்றை நேற்று வெளியிட்டார்கள். வார்த்தைகளாக எழுதுவதற்கே அருவெறுப்பாக இருக்கும் வசனங்கள், காட்சிகள் கொண்ட டீசராக அது அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட டீசரை வெளியிட்டதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தைத் தணிக்கை செய்யும் போது மிகவும் கவனத்துடன் தணிக்கை செய்து டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளோ, வசனங்களோ படத்தில் வராத அளவிற்குச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆர்யா போன்ற ஒரு நடிகர் இப்படிப்பட்ட டீசரை வெளியிட்டு அவருடைய பெயரையும் சேர்த்து கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு படத்தில் தருண்மகேஷ்பாபு படத்தில் தருண் "இரண்டாம் குத்து" படம் எடுத்தவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? - பாரதிராஜா கண்டனம் "இரண்டாம் குத்து" படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

siriyaar - avinashi,இந்தியா
14 அக், 2020 - 05:10 Report Abuse
siriyaar சினிமா காமவெறியை தூண்டி விடுகிறது, இதுவே கற்பழிப்பு நடக்க மூல காரணம் , சினிமாவை ஒழுங்கு படுத்தாத வரை கற்பழிப்புக்கு எந்த சட்டம் போட்டாலும் தடுக்க முடியாது. மது எவ்வளவு தீங்கு செய்கிறதோ அதைவிட பல மடங்கு சினிமா செய்கிறது. ஆனால் மக்களிடம் எந்த அரசியல் வாதியும் இது பற்றி பேச மாட்டார், ஏன்ன நடிகைகளின் மீது மிகுந்த பாசம்.
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13 அக், 2020 - 01:00 Report Abuse
Rajagopal ஒரு காலத்தில் நியூ வேவ் என்று கிளம்பியது. மலையாள படங்கள் ஏ செர்டிபிகேட் போட்டு ஆபாசமாக போஸ்டர் வேறு போட்டிருப்பார்கள். அவளோட ராவுகள் போஸ்டர் பார்த்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும். குப்த ஞான் என்று ஒரு படம். அதே போல சித்தார்த் என்று ஒரு படம். இதெல்லாம் புதிதல்ல. ஒரு படம் விடாமல் கற்பழிப்புக் காட்சி இருக்கும். அதில்லாவிட்டால் படம் தேட்டரில் போட முடியாது என்று விடுவார்கள். ஒவ்வொரு படத்திலும் கதா நாயகியை வித விதமான வகைகளில் கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும். போஸ்டரிலும் விடாமல் போட்டிருப்பார்கள். கதா நாயகன் வந்து முரடர்களை உதைத்து விரட்டுவதற்கு வேண்டுமென்றே நேரத்தை இழுப்பார்கள். இப்போது குற்றம் சொல்கிறார்களே, அந்த பழைய பண்பாட்டு இயக்குனர்களும் வேண்டிய மட்டும் பாடல் காட்சிகளில் மழை நீரில் கதா நாயகியை நனைய விட்டு காசு பார்த்திருக்கிறார்கள். அதனால் இப்போது நடப்பது சரி என்று சொல்லவில்லை. ஒரு திருடன் இன்னொரு திருடனை குற்றம் சொன்னால் அது தகாது. சொல்லவேண்டியது மற்றவர்கள்.
Rate this:
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
09 அக், 2020 - 13:01 Report Abuse
rajan_subramanian manian இவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?
Rate this:
Indian Ravichandran - Chennai,இந்தியா
09 அக், 2020 - 12:06 Report Abuse
Indian  Ravichandran மனநோயாளிகள் போல இதுபோன்ற படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்கிறார்கள்
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
09 அக், 2020 - 09:57 Report Abuse
sankaseshan தமிழ் நாட்டில் பெண்களை இழிவு படுத்தும் கலாச்சாரம் துவங்கியது சன் கலைஞர் tv மூலமாக தான் சினிமாவும் குறைச்சல் இல்லை .பாரதி ராஜா கண்டனம் செய்வது வேடிக்கை .
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in