Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி-க்கு 'பாரத ரத்னா' வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை

07 அக், 2020 - 19:07 IST
எழுத்தின் அளவு:
Chandrababu-demands-Bharat-ratna-award-to-SPB

இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான எஸ்பி.பாலசுப்ரமணியம் பத்து நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது மரணம் தென்னிந்தியத் திரையுலகத்தை மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.

கடந்த பத்து நாட்களாக எஸ்பிபி பற்றி பலரும் அவர்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பல்வேறு தகவல்களை சமூக வலைத்தளங்களிலும், யு டியூபிலும் பதிவேற்றி வருகிறார்கள்.

எஸ்பிபி மறைந்ததுமே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் பிரதமர் மோடிக்கு அது குறித்து கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று எஸ்பிபியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, “தெலுங்கு மக்களின் பெருமைமிகு கலைஞர் எஸ்பிபி மறைந்து 11 நாட்களாகிவிட்டது. அவருடைய இனிமையான குரல் எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் நம்முடன்தான் இருக்கிறார். அவரது நினைவுகளுக்கு மரியாதை கொடுத்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
8 கோடி வசூலித்ததா க.பெ.ரணசிங்கம் ?8 கோடி வசூலித்ததா க.பெ.ரணசிங்கம் ? 'நானே கண்கலங்கி விட்டேன்!' 'நானே கண்கலங்கி விட்டேன்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ranjan - france,பிரான்ஸ்
07 அக், 2020 - 22:22 Report Abuse
ranjan தமிழக தொலைக்காட்சிகளுக்கு அன்பான வேண்டுகோல் எஸ் பி சரணை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள் மாபெரும் அஞ்சலி ஆகஇருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in