"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து அதிர்ச்சியூட்டியிருக்கிறார் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' படத்திலும் மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருடைய திருமணம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுவிட்டார் காஜல். இருப்பினும் பத்து நாட்களுக்கு முன்பே அவருடைய நெருங்கிய நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து தன்னுடைய திருமண விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிட்டாராம்.
காஜல் அகர்வால் தங்கைக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இதற்கு மேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென குடும்பத்தினர் சொன்னதால் காஜல் சம்மதம் சொல்லிவிட்டாராம். திருமணத்திற்குப் பிறகும் நடிக்க வருங்காலக் கணவர் வீட்டாரும் சம்மதம் சொல்லிவிட்டார்களாம்.
காஜலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.