சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த படம் கவலுடாரி. ஹேமந்த் ராவ் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷி, ஆனந்த் நாக், ரோஷ்னி பிரகாஷ் நடித்திருந்தனர். குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் நல்ல வசூலை கொடுத்தது. குற்றப் பிரிவு போலீசால் புறக்கணிக்கப்படும் ஒரு கொலை வழக்கை, ஒரு சாதாரண டிராபிக் போலீஸ் கண்டுபிடிக்கிற கதை.
இந்த படம் தற்போது தமிழில் கபடதாரி என்ற பெயரில் ரீமேக் ஆகிகிறது. சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். தனஞ்செயன் தயாரிக்கிறார். படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், 'கபடதாரி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த உடன் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் நேற்று தனது 36வது பிறந்தநாளை சிபி கொண்டாடினார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த படக்குழுவினர் அவருக்கு தெரியாமலேயே படத்தின் பர்ஸ்ட் லுக்கை தயார் செய்து அதனை நடிகர் சூர்யாவை கொண்டு வெளியிட்டார்கள். இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து விட்டார் சிபிராஜ்.