மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் படம் லாபம். இதில் ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். விவசாயத்தை கைப்பற்ற துடிக்கும் கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து போராடும் ஒரு போராளியின் கதை. இதில் ஸ்ருதிஹாசன் புரட்சி பாடகியாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி குன்றத்தூர் பகுதியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி : எஸ்.பி.ஜனநாதனின் எல்லா படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. கொரோனா காலத்தில் நான் தனியாகத்தான் இருந்தேன். என்னுடன் என் செல்ல பூனை மட்டும் இருந்தது. பல உண்மைகளை கொரோனா கால தனிமை உணர்த்தியது. என் வீட்டு குப்பைகளை நானே அகற்றியபோது தான் நான் எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறேன் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
கொரோனா கால பிரச்சினைகளில் இருந்து மீள முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது தான். ஆனால் நான் எப்போதுமே அதிக சம்பளம் வாங்கியது இல்லை. அதனால் என்னை குறைத்துக் கொள்ள சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறேன். காதலில்கூட தோற்று இருக்கிறேன். மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.
நான் அரசியலுக்கு வருவது பற்றி கேட்கிறார்கள். எனக்கு உண்மையிலேயே அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ஒரு குடிமகளாக நாட்டு நடப்புகளை அறிந்து வைத்திருக்கிறேன். அப்பா அரசியலில் இருப்பதால் மட்டுமே நானும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. வருகிற தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டால் மாட்டேன் என்பது தான் என் பதில். இசையும், நடிப்பும் மட்டுமே இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்றார்.