துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
2002ல் சுசி கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் பிரசன்னா, தொடர்ந்து வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரசன்னாவின் மனைவி சினேகா வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டார். இதை பிரசன்னாவின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கு நடிகனாக வேண்டுமென ஒரு கனவு இருந்தது. அந்த கனவே என்னை சினிமாவிற்கு கொண்டுவந்தது. இந்த 18 ஆண்டுகளில் வாழ்க்கை ஏராளமான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. தோல்விகளே என்னை வலிமையாக்கியது. பயணத்தை தொடங்கியபோது இருந்த கனவு இப்போதும் இருக்கிறது. இப்போது உங்களது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் என்னோடு உள்ளன. உங்கள் அனைவருக்கும் நன்றி' என நெகிச்சியோடு தெரிவித்துள்ளார்.