இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் | நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா | மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி | பருத்திவீரன், சாஹோ, சண்டக்கோழி-2 : ஞாயிறு திரைப்படங்கள் | மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் |
தெலுங்கில் 'ஏ மாய சேசவே' படத்தில் சேர்ந்து நடித்த நாகசைதன்யா, சமந்தா பின்னர் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைக் கைவிடாமல் நடித்து வருகிறார் சமந்தா. அவ்வப்போது அவர் கர்ப்பம் என வழக்கம் போல வதந்திகள் வந்தாலும் அதையெல்லாம் சமந்தா கண்டுகொள்வதில்லை.
இன்று தங்களது மூன்றாமாண்டு திருமண விழாவை கொண்டாடி வருகிறார்கள். அதை முன்னிட்டு சமந்தா இன்ஸ்டாகிராமில், தனது கணவர் நாகசைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனக்காக நீங்கள், உங்களுக்காக நான். எந்த கதவாக இருந்தாலும் அதை நாம் ஒன்றிணைந்து திறப்போம், இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கணவரே” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.